தண்ணீர்முக்கோம் கரை
கேரளத்தில் உள்ள நீர்தேக்கம்தண்ணீர்முக்கோம் கரை என்பது தென்னிந்தியாவின், கேரள மாநிலத்தின், ஆலப்புழை மாவட்டதில் கட்டபட்டுள்ள ஒரு கட்டுமானமாகும். இது குட்டநாடு அபிவிருத்தி திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்டது, மேற்கில் தண்ணீர்முக்கோமும் கிழக்கில் வெச்சூருக்கும் இடையில் வேம்பநாட்டு ஏரியின் குட்டானாட்டின் தாழ்வான பகுதிகளுக்குள் உப்பு நீர் ஊடுருவுவதைத் தடுப்பதற்காக இது கட்டபட்டுள்ளது. தண்ணீர்முகோம் கரையானது 1974 இல் கட்டப்பட்டு, 1976 முதல் பயன்பாட்டுக்கு வந்தது. இது இந்தியாவின் மிகப்பெரிய மண் சீராக்கி ஆகும். இந்தக் கரையானது ஏரியை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கிறது - ஒன்று உப்புநீரைக் கொண்டது, மற்றொன்று ஏரிக்கு ஆறுகளால் கொண்டுவரப்படும் நண்ணீரைத் தேக்குவது ஆகும்.
Read article